< Back
மாநில செய்திகள்
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வேலூர்
மாநில செய்திகள்

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
17 Sept 2023 10:15 PM IST

கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது 52), சரவணன் (19). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தபோது சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் கைது செய்து 1¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

சங்கர், சரவணன் இருவரும் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அதற்கான ஆணையின் நகலை போலீசார் சேலம் ஜெயில் அதிகாரியிடம் வழங்கினர்.

Related Tags :
மேலும் செய்திகள்