< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|23 March 2023 12:18 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி வாளவந்தான்கோட்டை பழைய பர்மா காலனி அசோகர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). கடந்த மாதம் 15-ந்தேதி 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சரவணனை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் துவாக்குடி போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள சரவணன் தொடர்ந்து கஞ்சா விற்றுவந்ததாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில், சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் உத்தரவிட்டார்.