< Back
மாநில செய்திகள்
ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
29 Jun 2023 2:31 PM IST

மீஞ்சூரில் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 15-ந்தேதி குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் நடத்திய வாகன சோதனையில் லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய சென்னை தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த காமேஷ் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் காமேசை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்