< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
17 Jun 2023 12:15 AM IST

ராமநாதபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துமணி (வயது 40). இவர் 10 வயது சிறுமியை நைசாக பேசி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமணியை கைது செய்தனர். இந் நிலையில் மேற்கண்ட முத்துமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பரிந்துரை செய்தார். இதனை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முத்துமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முத்துமணி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்