திருச்சி
செல்போன் பறித்த வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|செல்போன் பறித்த வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஸ்ரீரங்கம் காந்திரோட்டில் ஒரு பேக்கரி கடை முன்பு நின்று கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து செல்ேபானை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் நிவாஸ் என்ற சீனிவாசன்(வயது 23) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நிவாஸ் என்ற சீனிவாசனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள நிவாஸ் என்ற சீனிவாசனிடம் வழங்கப்பட்டது.