< Back
மாநில செய்திகள்
சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
27 Sept 2023 12:15 AM IST

நாகை அருகே சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிக்கல்:

நாகை அருகே பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57). இவர் குற்றம்பொருத்தானிருப்பு பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தனபாலன் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜானி டாம் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்