< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|9 Oct 2022 12:59 AM IST
போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீரனூர் அருகே குளத்தூர் தாலுகா நெடுதாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் இவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரையின் பேரில் கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி முருகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து போலீசார், அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.