ஓட்டல் உரிமையாளரை வெறித்தனமாக வெட்டிய 7 பேர் கொண்டு கும்பல்...! தூத்துக்குடியில் பரபரப்பு
|திருச்செந்தூர் அருகே ஓட்டல் உரிமையாளரை 7 பேர் கொண்டு கும்பல் கடைக்குள் புகுந்து சரமாரியா வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் பாலகுமரேசன் தனியார் உணவுகம் ஒன்று நடத்திவந்தார். பாலகுமரேசன் அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள தனது உணவகத்தில் இன்று வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த உணவகத்தில் புகுந்த 7 பேர் கொண்டு கும்பல் பாலகுமரேசனை பட்டா கத்தியால் சரிமாரியாக வெட்டியது.
தடுக்க வந்தவர்களையும் அந்த கும்பல் ஆயுதத்தால் தாக்க முயன்றது. பின்னர், உணவகத்தில் இருந்தகள் அனைவரும் ஓடிவந்து அந்த கும்பலை விரட்டியதால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதனை அடுத்து படுகாயத்துடன் ரத்த வெள்ளதில் கிடந்த பாலகுமரேசனை மீட்டு நெல்லை அரசு மருத்துமனைக்கு அவர்கள் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது இந்த கொடூர சம்பவம் பாதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பறி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததால் ஓட்டல் உரிமையாளர் பாலகுமரேசனை அந்த கும்பல் வெட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.