< Back
மாநில செய்திகள்
கோர்ட்டில் ஆஜராக வந்த நபரை கொலை செய்ய காத்திருந்த கும்பல் - கைது செய்த போலீசார்
மாநில செய்திகள்

கோர்ட்டில் ஆஜராக வந்த நபரை கொலை செய்ய காத்திருந்த கும்பல் - கைது செய்த போலீசார்

தினத்தந்தி
|
8 May 2024 3:16 PM IST

அவர்களிடம் இருந்து 4 பட்டாக் கத்திகள், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

சென்னையில், கோர்ட்டில் ஆஜராக வந்த நபரை கொலை செய்ய காத்திருந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை அருகே ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர், 6 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பட்டாக் கத்திகள், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், ஓட்டேரி மங்களபுரத்தை சேர்ந்த யஸ்வந்த் ராயன், பெரம்பூரைச் சேர்ந்த கேளப் பிரான்சிஸ், கோகுல் நாத், கார்த்திக், அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், ஜெய்பிரதாப் என்பது தெரியவந்தது.

விசாரணையில், யஸ்வந்த் ராயனுக்கும், அயனாவரத்தை சேர்ந்த சரண் என்பவருக்கும் முன்பகை இருந்ததும், கோர்ட்டில் ஆஜராகி வெளியே வரும் போது சரணை கொலை செய்ய கூட்டாளிகளுடன் யஸ்வந்த் ராயன் காத்திருந்ததும் அம்பலமானது. தொடர்ந்து 6 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்