ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சிவகங்கையில் பரபரப்பு
|ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு பகுதியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. பின்னர் பெண்ணுடன் பேசி கொண்டிருந்தவரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அருகில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது 5-க்கும் மேற்பட்டோர் எனவும் கூறப்படுகிறது. தப்பியோடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.