< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு
|25 Sept 2023 3:08 PM IST
சென்னையில் நடந்த சமத்துவ விநாயகர் வழிபாட்டில் ஏராளமான இஸ்லாமிய, கிறிஸ்தவ பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் சிலை வழிபாட்டுக்கும் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் நடந்த இந்த வழிபாட்டில் இஸ்லாமிய, கிறிஸ்தவ பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல ஆர்.கே.நகர் நேதாஜி நகர், 3-வது தெருவில் நடந்த சமத்துவ விநாயகர் வழிபாட்டிலும் ஏராளமான இஸ்லாமிய, கிறிஸ்தவ பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துணை போலீஸ் கமிஷனர்கள் ரஜத்சதுர்வேதி, சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.