திருவாரூர்
அடைக்கலம் காத்த விநாயகர் கோவில் குடமுழுக்கு
|அடைக்கலம் காத்த விநாயகர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.
முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகத்தை அடுத்த இடும்பாவனம் மேலவாடியகாட்டில் அமிர்தவள்ளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன. விழாவையொட்டி யாக சாலைபூஜைகள் நடந்தன. பின்னர் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை உள்ளிட்டவைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர்.
அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் காலை 11 மணிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை முத்துப்பேட்டை போலீசார் செய்திருந்தனர். அதேபோல் முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த விநாயகர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் காலை 10.30 மணி அளவில் புனித நீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடந்தது. அதனை தொடர்ந்து அடைக்கலம் காத்த மாரியம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.