< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
3 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட விநாயகர் சிலை மீண்டும் அதே இடத்தில்... பொதுமக்கள் வியப்பு
|8 July 2024 7:45 AM IST
விநாயகர் சிலையை திருடியவர்கள் 3 ஆண்டுக்கு பிறகு கோவிலில் வைத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சி பகுதியில் அவலூர் பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள அருந்ததியர்பாளையத்தில் குளம் உள்ளது. அந்தப் பகுதியில் மாட்டுச்சந்தை அருகே சமுதாயக்கூடம் கட்டப்பட்டு அதன் அருகில் விநாயகர் சிலையை வைத்து அருந்ததிபாளையம் பகுதி மக்கள் வணங்கி வந்தனர்.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு விநாயகர் சிலையை யாரோ மர்மநபர்கள் திருடி எடுத்துச் சென்று விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று விநாயகர் சிலையை திருடியவர்களே கொண்டு வந்து வைத்து சென்று விட்டனர். திருடிச்சென்ற விநாயகர் மீண்டும் கோவிலில் வைக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் வியப்புடன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் விநாயகருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து வணங்கினர்.