< Back
மாநில செய்திகள்
கோடியக்கரை கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கோடியக்கரை கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன

தினத்தந்தி
|
19 Sept 2023 11:58 PM IST

மணமேல்குடி பகுதியில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கோடியக்கரை கடலில் கரைத்தனர்.

கடலில் விநாயகர் சிலை கரைப்பு

மணமேல்குடி சுற்றியுள்ள பகுதிகளான மணமேல்குடி சிவன்கோவில் தெரு, வடக்கு மணமேல்குடி, தண்டலை, மாந்தாங்குடி வெள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தாரை தப்பட்டை முழங்க இளைஞர்கள் நடனமாடி ஊர்வலமாக மணமேல்குடி கோடியக்கரை கடலுக்கு வந்தனர். பின்னர் அங்கு கடலில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். பாதுகாப்பு பணியில் நகர போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் ஈடுபட்டிருந்தனர்.

குளத்தில் கரைப்பு

திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலியபெருமாள் கோவில் திடல் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முக்கத்திலும் பா.ஜ.க. சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து நேற்று விநாயகர் சிலைகளை பா.ஜ.க.வினர் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கடைவீதி, தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், கோட்டை வீதி, ஊத்திக்கேணி ஆகிய பகுதிகள் வழியாக திருமயம் உச்சப்பாறை மலையடி குளத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

இதேபோல் மணமேல்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து விநாயகா் சிலைகள் ஊர்வலம் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. மணமேல்குடி கடைவீதியில் இருந்து விநாயகர் சிலைகளை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மணமேல்குடி கோடியக்கரையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்