< Back
மாநில செய்திகள்
கோபியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஈரோடு
மாநில செய்திகள்

கோபியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
1 Sept 2022 2:35 AM IST

கோபியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

கடத்தூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் கோபி மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத்ெதாடர்ந்து கோபி பகுதியில் வைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கோபி நாயக்கன்காட்டு பகுதிக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சிலைகள் ஊர்வலம் கோபி நாயக்கன் காட்டில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம், மார்க்கெட், கடை வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சந்தியா வனத்துறை என்னும் இடத்தில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலை சென்றடைந்தது. பின்னர் விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்பட்டன.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில், ஒரு கூடுதல் துணை சூப்பிரண்டு, ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 7 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்