< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
4 Sept 2022 9:58 PM IST

சோளிங்கரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பஸ் நிலையம், போலீஸ் லைன், மேல் வன்னியர் வீதி, பைராகி மட தெரு, திருக்கோளம்பேடு, பெரிய தெரு, கொண்டபாளையம் பில்லாஞ்சி உள்ளிட்ட 36 இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

5-வது நாளான நேற்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிலைகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று வாலாஜா ரோட்டில் உள்ள ஏ.எல்.சாமி நகரில் உள்ள கல்குவாரியில் கரைத்தனர். இதனை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்