< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டியில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
2 Sept 2022 10:30 PM IST

விக்கிரவாண்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி,


இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,536 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது, 7-வது நாட்களில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏரி, குளம், கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விக்கிரவாண்டி மற்றும் பெரிய தச்சூர் காவல் நிலைய பகுதிகளில் இந்த ஆண்டு 48 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக வீடூர் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு கரைக்கப்பட்டது.ஊர்வலத்தின் போது, விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்களும் அணை பகுதியில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்