< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
வேலூர்
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
23 Sept 2023 10:24 PM IST

கணியம்பாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட பிரம்மாண்டமான சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கணியம்பாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அம்பேத்கர் நகர் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் நாட்டாண்மைதாரர்கள் உள்ளிட்ட விழாக்குழுவினரால் வைக்கப்பட்ட சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் இளைஞர்கள் மேளதாளம் முழங்க ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

இதனையொட்டி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்