< Back
மாநில செய்திகள்
சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
தேனி
மாநில செய்திகள்

சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
21 Sept 2023 2:30 AM IST

சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 160 விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, சின்னமனூர் முத்தாலம்மன் கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. சின்னமனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன்பிறகு விநாயர் சிலைகள் அனைத்தும் முல்லைப்பெரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொன்றாக கரைக்கப்பட்டன. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்