< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
|23 Sept 2023 11:22 PM IST
விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏம்பகோட்டை, தாழனூர், மீமிசல் குடியிருப்பு, குமரப்பன் வயல், கானாடு செய்யாணம் எஸ்பி மடம், கோட்டைதோப்பு, மீமிசல் கடைவீதி அய்யம்பட்டினம், வடக்கு அய்யம்பட்டினம், தெற்கு கோடகுடி, பொத்தையன் வயல் போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 5 நாட்களாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். பின்னர் 13 விநாயகர் சிலைகளும் வாகனத்தில் ஏற்றி கொண்டு ஊர்வலமாக சென்று மீமிசல் கடல் பகுதியில் கரைத்தனர்.