< Back
மாநில செய்திகள்
1000 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
திருச்சி
மாநில செய்திகள்

1000 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

தினத்தந்தி
|
25 July 2022 1:23 AM IST

1000 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் போஜராஜன், திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் பேசினர். இதில், திருச்சி மாநகரில் 1000 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலம் நடத்துவது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வது. செப்டம்பர் மாதம் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும். இந்த ஆண்டு உறையூர், அரியமங்கலம், ஸ்ரீரங்கம் போலீஸ் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை கொண்டு வந்து குழுக்களாக காவிரி ஆற்றில் கொண்டு சென்று கரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்