< Back
மாநில செய்திகள்
சென்னையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்
மாநில செய்திகள்

சென்னையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்

தினத்தந்தி
|
24 Sept 2023 6:46 PM IST

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்தநிலையில் 23-ந் தேதி மற்றும் 24-ந் தேதி சிலை கரைப்புக்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இரண்டாவது நாளாக இன்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்பட்டு வருகிறது.

பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன்கள், டிராலிகள் மூலம் கடலில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை கரைக்கும் போது எவ்வித அசாம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்திய கடற்படை சார்பில் ரோந்து கப்பல் மற்றும் டிரோன்கள் மூலமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டை உள்ளிட்ட கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். விநாயகர் சிலைகளை கரைப்பதை முன்னிட்டு சென்னையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்