< Back
மாநில செய்திகள்
15 லட்சம் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் விநாயகர்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

15 லட்சம் ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் விநாயகர்

தினத்தந்தி
|
19 Sept 2023 11:05 AM IST

காஞ்சீபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவில் 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் பிரசித்தி பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவில் உள்ளது. ஆண்டுதோரும் இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏலேல சிங்க விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ரூபாய் நோட்டுகளால் கருவறையில் உள்ள விநாயகருக்கு அலங்காரம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் இன்று ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய 10, 20, 50, 100, 200, 500 ஆகிய ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்