< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து
|7 Sept 2024 12:25 PM IST
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
முழுமுதற் கடவுள் எம்பெருமான் விநாயகப் பெருமான் அவதரித்த தினம் கொண்டாடும் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகிட, வாழ்வில் மென்மேலும் உயர, விநாயகப் பெருமான் அருள் துணை நிற்கட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.