< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா
தென்காசி
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா

தினத்தந்தி
|
2 Sept 2022 4:09 AM IST

கீழப்பாவூரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு 10 நாட்கள் தினம் தோறும் வெவ்வேறு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு விசேஷ அலங்காரம், 1008 அர்ச்சனை, இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி அன்று காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜெபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம், நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தினமும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்