< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா
|2 Sept 2022 4:02 AM IST
அம்பை மெரிட் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா
அம்பை:
அம்பை மெரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விநாயகர் பேரணி நடைபெற்றது. பேரணியில் விநாயகர் வேடம் அணிந்த மாணவ-மாணவிகள் ஒரு குழுவாகவும், விநாயகர் சிலைகள் கொண்டு வந்த மாணவ-மாணவிகள் ஒரு குழுவாகவும், பழங்கள், பலகாரங்கள் கொண்டு வந்த மாணவர்கள் ஒரு குழுவாகவும், பூக்கள் அணிவகுப்பும் நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வர் நாகலட்சுமி வரவேற்று பேசினார். மெரிட் கல்வி குழுமத்தின் தாளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வர் அனிதா நன்றி கூறினார்.