< Back
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா

தினத்தந்தி
|
1 Sept 2022 2:47 AM IST

களக்காடு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகர் மூஞ்சிறு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

இதே போல் களக்காடு திருக்கல்யாண தெரு கருத்த விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இரவில் விசேஷ அலங்காரத்தில் விநாயகர் வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

களக்காடு நினைத்ததை முடித்த விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து சமுதாய சதுர்த்தி குழு சார்பாக 25 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது

மேலும் செய்திகள்