< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா
|19 Sept 2023 12:12 AM IST
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
வாலாஜா கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடாதிபதி கயிலை ஞானகுரு முரளிதர சுவாமிகள் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விநாயகர் சதுர்த்தி 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள் என மொத்தம் 48 மண்டலங்களுக்கும் விருட்சங்கள் அமைத்து காலச்சக்கரம் என்ற பெயரில் அமைந்துள்ள செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அஷ்டதிரவியங்கள் மற்றும் விளாம்பழம், மோதகம், அப்பம், சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற பொருட்களுடன் அருகம்புல், கரும்பு, வெள்ளெருக்கம் வேர் மற்றும் பல்வேறு வகையான மூலிகைகளை கொண்டு மஹா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.