< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கந்தூரி விழா
|7 Aug 2022 2:18 AM IST
பாளையங்கோட்டை காதர் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் காதர் அவுலியா பள்ளிவாசல் மற்றும் காதர் மீரா பக்ருதீன் தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலையில் ஹத்தாத் ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிவாசல் தலைவர் அப்துர் ரகுமான் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கோதர் மைதீன், வருசை முகைதீன், இணை செயலாளர்கள் அப்துல் கரீம், அப்துல் காதர், நிர்வாகி இல்யாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எம்.கே.எம்.முகமது ஷாபி வரவேற்றார். நெல்லை வக்பு கண்காணிப்பாளர் ஹைதர் அலி, நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் ஜலீல் அகமது உஸ்மானி ஆகியோர் பேசினர். இதில் பொருளாளர் எம்.கே.எம். செய்யது அகமது கபீர், அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் செய்யது அகமது, வக்பு ஆய்வாளர் மன்சூர் அகமது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.