< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
நகர காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா
|3 Oct 2023 12:15 AM IST
மன்னார்குடி நகர காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மன்னார்குடி:
மன்னார்குடி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கனகவேல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தேரடியில் உள்ள காந்தி சிலைக்கும்,நடேசன் தெரு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொறுப்பாளர் நெடுவை குணசேகரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வடுகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேணு அனந்தகிருஷ்ணன், மாவட்ட சேவாதள செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சங்கு கோபால், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.