< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் என்றென்றும் நிலைத்திருக்கும் - டிடிவி தினகரன்
|30 Jan 2024 9:41 AM IST
காந்தியடிகளின் 76-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
காந்தியடிகளின் 76-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பாரத தேசத்தின் விடுதலைக்காக வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்திய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று.
நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் மனதில் சுதந்திர உணர்வை தூண்டி விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் அழியாச் சுவடுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.