காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்களில் முதன்மையானவர் காந்தி - கமல்ஹாசன்
|ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி "தியாகிகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
உத்தமர் காந்தியடிகளின் 76-வது நினைவு நாளானது தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30-ந்தேதி "தியாகிகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாக தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.
இதனையொட்டி காந்தியின் நினைவை போற்றும் விதமாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இதில், தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக, என்று கூறியுள்ளார்.