< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காந்தி ஜெயந்தி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
|2 Oct 2024 10:01 AM IST
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.