< Back
மாநில செய்திகள்
காந்தி ஜெயந்தி விழா
தூத்துக்குடி
மாநில செய்திகள்

காந்தி ஜெயந்தி விழா

தினத்தந்தி
|
4 Oct 2023 12:30 AM IST

ஆறுமுகநேரியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் மற்றும் அரசு பொது தேர்வில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் எல்.ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகி எஸ்.டி.சண்முகம், நகர பொதுச்செயலாளர் பழனிவேல், நகர துணைத் தலைவர் மூக்கன் கிறிஸ்டியான், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் பொருளாளர் ஏ. ராஜா, செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் எஸ்.கே.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை பார்வதா தேவி சிவசுப்பிரமணியனுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மகாத்மா காந்தியின் பிறந்த தின விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை வக்கீல் எஸ்.கே.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் எக்ஸ்.ஆல்வின் சேவியர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்