< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
13 Nov 2023 6:55 AM IST

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இந்த விழாவின்போது யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளுதல், வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க சண்முகவிலாசம் சேர்தல், சுவாமிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்