< Back
மாநில செய்திகள்
செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா

தினத்தந்தி
|
29 Oct 2022 2:02 AM IST

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை ஏகாதச ருத்ர ஜெபமும், சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கந்த சஷ்டி விழா விமரிசையாக நடக்கிறது. தண்டாயுதபாணி உற்சவர் சிலைக்கு பழங்கள், பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடக்கிறது. 31-ந் தேதி காலை 9 மணிக்கு செட்டிகுளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேசுவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

மேலும் செய்திகள்