< Back
மாநில செய்திகள்
திருவள்ளூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
7 Feb 2023 8:00 PM IST

திருவள்ளூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவில் நேற்று முதல் நடைபெறும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்தும் வகையிலும் அனைவரும் பயனடையும் வகையிலும் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. தனிநபர் போட்டிகளில் மாநில அளவில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50, ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் துணை போலீஸ் சுப்பிரண்டு விவேகானந்த சுக்லா, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்- வீராங்கனைகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்