சிவகங்கை
டேபிள் டென்னிஸ் போட்டி
|டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் நடைபெற்றது. போட்டிக்கு டென்னிஸ் கழக செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 20 பள்ளிகளில் இருந்து 180 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியை பள்ளி முதல்வர் சசிகலா தொடங்கி வைத்தார். போட்டியில் 9 வயதிற்கான பிரிவில் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் சர்வின், 11 வயதிற்கான ஆண்கள் பிரிவில் கார்மல் பள்ளி மாணவர் ஜெயச்சந்திரன், பெண்கள் பிரிவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி நிலா ஆகியோர் முதலிடம் பெற்றனர். 13 வயதிற்குஉட்பட்ட ஆண்கள் பிரிவில் மகரிஷி பள்ளி மாணவர் சூர்யபிரகாஷ், பெண்கள் பிரிவில் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி மாணவர் ரூபதர்கன், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பொதுபிரிவில் கார்மல் பள்ளி மாணவர் ஜெயச்சந்திரன் மற்றும் பெண்கள் பொது பிரிவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி சனா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.போட்டியில் தி லீடர்ஸ் பள்ளி மாணவர் அகிலேஷ் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். அவரை சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழக தலைவர் டாக்டர் செல்வகுமரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டி ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், இணை செய லாளர் ஜெயவிக்னேஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.