ராமநாதபுரம்
வட்டார விளையாட்டு போட்டிகள்
|தொண்டியில் வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
தொண்டி,
தொண்டியில் புது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 100-வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது. இதனையொட்டி சுகாதாரத்துறை மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமை வகித்தார். போட்டிகளை துணை இயக்குனர் அஜித் பிரபு தொடங்கி வைத்தார். இதில் ரங்கோலி, கயிறு இழுத்தல், கபடி, ஓட்டப்பந்தயம், கிரிக்கெட், வாலிபால், கேரம், செஸ் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டி களில் அரசு மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஆசா பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி, டாக்டர்கள் அருண், டார்லிங் டன், அல்ஜிபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.