< Back
மாநில செய்திகள்
மாணவிகள் விளையாட்டு போட்டியில் சாதனை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மாணவிகள் விளையாட்டு போட்டியில் சாதனை

தினத்தந்தி
|
8 Nov 2022 7:23 PM IST

மாணவிகள் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. இதில் 17 வயதிற்குட்பட்ட மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் ஏராளமான பள்ளிகள் பங்கேற்றன. அதில் பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை பெற்று உள்ளனர். விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர். இந்த மாணவிகளை பள்ளியின் கல்வி குழு தலைவர் குருசுப்பிரமணியன், இருளப்பன், துணைத்தலைவர் முத்துராமலிங்கம் பிள்ளை, சவரிமுத்து பிள்ளை, தாளாளர் முனியாண்டி பிள்ளை, பொருளாளர் ராமதாஸ், கோவிந்தராஜன், மகேசுவரன், துணை முதல்வர் பிரபுசெல்வம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்