< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
மாணவர்கள் எறிபந்து போட்டியில் சாதனை
|27 Oct 2022 12:12 AM IST
மாணவர்கள் எறிபந்து போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
பரமக்குடி,
பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எறி பந்து போட்டியில் பரமக்குடி வட்டார அளவில் வெற்றி பெற்று தற்போது பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டது. இந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர் ராஜா, நிரோஜா பானு ஆகியோரை கீழ முஸ்லிம் ஜமாத் சபையின் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் வியாக்கத் அலிகான், பள்ளியின் தாளாளர் ஷாஜகான், பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர்அஜ்மல் கான் உள்பட ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் பாராட்டினர்.