< Back
மாநில செய்திகள்
தேர்தல் விழிப்புணர்வு போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு போட்டி

தினத்தந்தி
|
26 Oct 2022 11:37 PM IST

தேர்தல் விழிப்புணர்வு போட்டி நடந்தது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து "எனது வாக்கு எனது உரிமை"- "ஒரு வாக்கின் சக்தி" எனும் தலைப்பில் சுவரொட்டிகள் தயாரித்தல் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, இளையான்குடி தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் சிறந்த சுவரொட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரால் பண பரிசு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர்முகமது மற்றும் அப்ரோஸ் ஆகியோருடன் இணைந்து கிராம தலையாரி லட்சுமணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும் செய்திகள்