< Back
மாநில செய்திகள்
காம்பியாவில் குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து - தமிழகத்தில் விற்கப்படுகிறதா?
மாநில செய்திகள்

காம்பியாவில் குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து - தமிழகத்தில் விற்கப்படுகிறதா?

தினத்தந்தி
|
13 Oct 2022 9:18 AM IST

காம்பியாவில் குழந்தைகளை பலி வாங்கிய இருமல் மருந்து தமிழகத்தில் விற்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னை,

ஆப்பிரிக்காவின் காம்பியாவில் இந்திய நிறுவனமான Maiden Pharmaceuticals (மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ்) தயாரித்த இருமல் மருந்து உட்கொண்டு அந்நாட்டு 66 குழந்தைகள் இறந்து போன நிலையில், தமிழ்நாட்டில் அந்த நிறுவனத்தின் மருந்து விற்கப்படுகிறதா என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை கள ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில் தடைசெய்யபட்ட Maiden Pharmaceuticals நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் தமிழகத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவின் பெயரில் பரிசசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அந்த மருந்தில் உள்ள diethylene glycol (டைதிலீன் கிளைகோல்) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே கர்நாடகாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளில் இந்த பொருள் உள்ளதா என கண்காணிக்க அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்