< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் புராதன சின்னங்கள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் புராதன சின்னங்கள்

தினத்தந்தி
|
4 Dec 2022 6:45 PM IST

மாமல்லபுரத்தில் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் புராதன சின்னங்கள் மிளிருகிறது.

ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.


தற்போது இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திலும் நடைபெற உள்ளது. இங்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கின்ற வகையிலும், அவர்கள் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் புராதன சின்னங்கள் மீது ஜி20 லேசர் லைட்டில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாமல்லபுரத்தில் முதல் கட்டமாக வியாழக்கிழமை வெண்ணை உருண்டைக்கல் புராதன சின்னத்தில் மட்டும் ஜி20 லேசர் ஒளி பொருத்தப்பட்டு ஒளியூட்டப்பட்டது.


அதை தொடர்ந்து தற்போது கடற்கரை கோவில், ஐந்து ரதம் மற்றும் வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட அனைத்து புராதன சின்னங்களிலும் ஜி20 லேசர் ஒளி மற்றும் மின்னொளி விளக்கு வெளிச்சத்தில் மிளிர்கிறது.


மாமல்லபுரம் புராதன சின்னங்களில் இந்த லேசர் ஒளி காட்சி ஒரு வாரத்திற்கு தொடரும் என்று தொல்லியல் துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்