< Back
மாநில செய்திகள்
சிவகாசி மாநகராட்சியில் கூடுதல் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்
விருதுநகர்
மாநில செய்திகள்

சிவகாசி மாநகராட்சியில் கூடுதல் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்

தினத்தந்தி
|
16 May 2023 12:27 AM IST

சிவகாசி மாநகராட்சியில் கூடுதல் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சியில் கூடுதல் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்

தமிழக அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்றப்பட்டது. இதில் தொழில்துறை அமைச்சராக இருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் தங்கம்தென்னரசு நிதி அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டு அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்ட பணிகள் தற்போது வேகம் பெற்று முடிக்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் போதிய நிதி ஒதுக்கப்படாமல் பல பணிகள் கிடப்பில் கிடக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் கூட இன்னும் முழுமைபெறவில்லை.

நிதி ஒதுக்கீடு

அதேபோல் திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்களும், பொதுமக்களுக்கும் பல்வேறு பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அந்த பணிகளும் தொடங்க வேண்டும். இப்படி போதிய நிதி இல்லாமல் வளர்ச்சி பணிகள் முழமையாக முடிக்கப்படாமலும், சில பணிகள் தொடங்கப்படாமலும் இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்றால் மாநில அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் வளர்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்களில் அதிகளவில் வளர்ச்சி பணிகள் நடக்க வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று சிவகாசி மாநகராட்சியில் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற நிதி ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்