< Back
மாநில செய்திகள்
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை   மேம்படுத்த நிதி உதவி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி

தினத்தந்தி
|
10 Oct 2022 10:13 PM IST

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பிற்கான உள் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு

கால்நடை வளர்ப்பவர்கள் அதற்கான உள் கட்டமைப்பு களை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்காக பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் தொகுப்பின் கீழ் ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கால்நடை வளர்ப்பு உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை பெற தொழில் முனை வோர், தனியார் நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், கால்நடை இனப் பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல் மற்றும் கால்நடை கழிவு வளம் தரும் மேலாண்மை அலகு அமைத்தல் ஆகிய தொழில்கள் தொடங்க மற்றும் விரிவாக்கம் செய்ய விண்ணப்பிக்காலம்.

நிதி உதவி

மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாக பெற முடியும். பயனாளிகள் பங்களிப்பாக 10 முதல் அதிகபட்சமாக 25 சதவீதம் பங்கு தொகையும் அளிக்க வேண்டும். மேலும் 3 சதவீதம் வரை குறைந்த வட்டியில் நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்புவோர் முறையான திட்ட மதீப்பிடு அறிக்கையுடன்ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தை அணுகி உரிய ஆலோசனையை பெறலாம். இந்த தகவலை ராமநாத புரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்