< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி:கலெக்டர் தொடங்கி வைத்தார்
|15 Feb 2023 12:15 AM IST
தேனி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, 1 வயது குழந்தை முதல் 19 வயதுடையவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதன்படி, தேனியை அடுத்த அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 162 துணை சுகாதார நிலையங்கள், 1,065 அங்கன்வாடி மையங்கள் மூலம் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ந்தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போக்ஸோ ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.