< Back
மாநில செய்திகள்
தர்மபுரியில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில்அம்பேத்கர் பிறந்தநாள் விழா
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரியில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில்அம்பேத்கர் பிறந்தநாள் விழா

தினத்தந்தி
|
15 April 2023 12:30 AM IST

தர்மபுரி மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தர்மபுரியில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் தாபா சிவா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகாந்த், மாவட்ட செயலாளர் விமல் ராஜ், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, விவசாய அணி மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட மீனவர் அணி தலைவர் தினேஷ் ராஜா, மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் கார்த்தி, செயலாளர் முருகன், ஒன்றிய தலைவர்கள் ரமேஷ், குமார், ரஞ்சித் குமார், தேவா, பேரூராட்சி தலைவர்கள் தங்கராஜ், சுப்பிரமணி, அரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் நவீன் குமார், மாவட்ட இணையதள அணி தலைவர் விமல்ராஜ், தர்மபுரி நகர தலைவர் பெருமாள் உள்பட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்