< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை - தமிழக அரசு அரசாணை
|13 Feb 2024 9:40 PM IST
முதற்கட்டமாக 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியருக்கு 1,000 ருபாய் வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.