< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சதுரகிரியில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பவுர்ணமி வழிபாடு
|27 Dec 2023 12:52 AM IST
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி மார்கழி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாகவும், மழை எச்சரிக்கை காரணமாகவும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இதனால் நேற்று பக்தர்கள் இன்றி மார்கழி பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.